”நாளைய இயக்குனரில்” எனது குறும்படம் “பசி” 13.03.11

நண்பர்களே நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கால் இறுதிக்குமுந்தைய ”டிராஜிடி சுற்றில்” ஒளிபரப்பான எனது குறும்படம் “பசி”. இக்குறும்படம் எழுத்தாளர் கே.ராஜாராம் அவர்களின் பசி சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
சோகமான கதை என்றவுடன் சிறுகதை புத்தகங்களை அடுக்கடுக்காக புரட்டியதில் சோகமே மிஞ்சியது.
எனது குறும்பட ஆக்கத்திற்கு தேவையானற்போல் எதும் அமையவில்லை.
நண்பர் பக்ருதீன் கே.ராஜாராம் அவர்களின் இந்த கதையை கூறினார்.பளிச் என்று இருந்த ஒரு ஐடியா எனக்குபிடித்திருந்தது.
படப்பிடிப்பிற்காக ஒரு தொடக்கப்பள்ளியில் அனுமதிகேட்டு போக அந்த அனுமதிவால் நீண்டுகொண்டேபோய் சென்னையில் நின்றது.


இனி முடியாது வேறுகதை எடுத்துக்கொள்ளலாம் என்றிருந்தபோது ஆபத்பாந்தனாய் உதவினார் படத்தின் கேமராமேன் ஷங்கர். அவரது ஊரான சத்தியமங்கலத்தில் படத்தை முடித்தோம்.

படத்தை பாருங்கள் உங்கள் மேலான விமர்சனத்தை பதிவு செய்யுங்கள்.
நன்றி!

">குறும்படம்



தொலைக்காட்சி நிகழ்ச்சி ">பகுதி1

">பகுதி2

கருத்துகள்

  1. மரியாதைக்குரிய திரு.இரவிக்குமார் அவர்களுக்கு, வணக்கம். நான் சண்முகவாசன், தென்காசி. நான் தங்களை சமீபத்தில் (18/11/2016 - 22/11/2016) திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஐந்தாவது உலக திரைப்படவிழாவில் ஓர் அமர்வின் பொழுது பார்த்தேன். அதனைப் பற்றி எனது நண்பராகிய தமுஎகச தென்காசி கிளைத் தோழரும் ஆசிரியருமாகிய திரு.இராசாராமிடம் பகிர்ந்து கொண்ட பொழுதுதான் தெரிய வந்தன அவர் எழுதிய “பசி” என்ற சிறுகதை தினமணி கதிரில் வெளியானது என்பதும், அதனைத் தாங்கள் குறும்படமாக எடுத்துள்ளீர்கள் என்பதும். ஏற்கனவே நான் தங்களின் “இன்று நேற்று நாளை” திரைப்படத்தையும் பார்த்துள்ளேன். ஆனால் “பசி” குறும்படத்தினை இப்பொழுதுதான் பார்த்தேன். திரைப்படத்தின் இயக்குநருக்கும், குறும்படத்தின் இயக்குநருக்கும் ஏராளமான வித்தியாசங்கள். குறும்படத்தினப் பொருத்தவரைத் தாங்கள் தேர்ந்தெடுத்த கதையானது நெஞ்சைப் பிசைய வைப்பது. நன்றாக இருந்தது. இதனை நான் ஒற்றை வரியில் விமர்சிக்க ஆசைப்படுகிறேன். “குறும்படம், தகவல்களின் முன்வைப்பு அதிக விழுக்காடு கொண்டதாகவும், உணர்வுகளின் வெளிப்பாடு குறைவான விழுக்காடு கொண்டதாகவும்” எனக்குத் தோன்றுகிறது. காட்சிப்படுத்தலில் இன்னும் கூடுதலாக சிரத்தை எடுத்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஆயினும் இதனைப் போன்ற படைப்புகள் வெளிவருவது தமிழர்களின் திரை இரசனைத் தரத்தினை உயர்த்துவதற்கும், அர்த்தமான திசை வழியில் கொண்டு செல்வதற்கும் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். இப்படைப்பிற்கான உங்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்