நாளைய இயக்குனர் இறுதிப்போட்டியும் பெற்ற பரிசும்!

நண்பர்களே நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி சென்னையில் கலைஞர் அரங்கத்தில் 16.07.2011 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருப்பூரிலிருந்து என் குடும்பத்தினர்கள், நண்பர்கள் என்று சுமார் பதினைந்துபேர் சென்றிருந்தோம் பரி்சுபெறுகிறோமோ இல்லையோ ஒரு அனுபவமாக இருக்கட்டும் என்று துணிந்துதான் அழைத்துசென்றேன்.

நானும் நண்பன் ராமும் திருவிளையாடல் நாகேஷ் போல “எனக்கில்லை..எனக்கில்லை... பரிசு எனக்கில்லை...” என்று புலம்பாத குறையாகத்தான் இருந்தோம்.
அரங்கமும்,அரங்கத்தில் இருந்த கூட்டமும் உண்மையிலேயே என்னை வெட்கப்படவைத்தது இன்னும் கூட சிரத்தையாக உழைத்திருக்கவேண்டுமோ என்று மனம் புளுங்கித்தள்ளியது.


என்ன செய்ய! என்ன எடுத்திருக்கிறேனோ அதுதானே “நான்!” நடப்பதுநடக்கட்டும் என்று போட்டியாளர் பகுதியில் அமர்ந்துகொண்டேன்
என்னுடன் படத்தில் நடித்தகருணா, நிறைமதி, என் தங்கையின் கணவர்,அப்புறம் படத்திற்க்கு தயாரிப்பு செய்த கே.பி.கே.செல்வராஜ் அவர்கள் அமர்ந்துகொள்ள என் பெற்றோரும் உடன் வந்திருந்த உறவினர்களும் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்துகொண்டார்கள்.

மற்றபோட்டியாளர்கள் எல்லாம் நண்பர்கள் குழாம் புடைசூழ ஜேஜேனு அமர்ந்திருந்தார்கள்.
போட்டி தொடங்கியது. பதற்றம் தொற்றிக்கொண்டது!


இந்த இறுதிப்போட்டிக்கு நான் எடுத்திருந்த குறும்படம் படம் “ஜீரோ கிலோமீட்டர்” இதுவரை எடுத்த படங்களிலெயே அதிக செலவிற்க்கும் மன உளைச்சலிலுக்கும் ஆட்பட்டது இந்த படத்திற்க்குத்தான்

முதல்படமாக நண்பன் ராமுவின் “சைனா டீ’ திரையிட்டார்கள் படத்திற்க்கு அரங்கத்தில் பலத்த கரவொலி மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தாலும் மதன் சார் படத்தைப்பற்றி நிறையாக சொல்லாதது சற்று வருத்தமாக இருந்தது.

அடுத்து என் படம் நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டது படம் ஓடிக்கொண்டிருக்கும் போது பாதியில் கரண்ட் கட்டாகிவிட்டது எனக்கு குழப்பத்தையும் படபடப்பையும் அதிகப்படுத்தியது மீண்டும் படத்தை திரையிட 5நிமிடம் தாமதமாகியது படம் முடிந்ததும் அரங்கத்தில் கிடைத்த கைதட்டல் என் காதுகளுக்கு கேட்கவில்லை ஒருவித பீதி முகத்தில் அப்பியதால் நிகழ்ச்சி தொகுப்பாளினி “என்ன ரவி ரொம்ப டென்சனாகிட்டீங்க நீங்க கூலானாதான் பேசுவேன்” என்று கூற
என்ன சொல்றது எல்லாம் எல்லாம் தெருஞ்சா பண்றேன் ஒருவழியா சரியாகி பிரதாப் சார் நல்லாருக்குனு சொல்ல மைக் மதன் சாருக்கு போச்சு அவர் படம் ஓபனிங் செண்டர் பினிசிங்னு கம்ப்ளீட்டா இருக்குனு சொன்னார் அப்புறம் ஒரு டவுட் கேட்டார் “இங்கிருந்து சென்னை போறவங்க அங்கிருந்து வர வழிய ஒன்னும் பண்ணலயா?” என்றார் எனக்கு இந்த கேள்வி கேட்பார் என்று முன்னமே மனதுக்கு பட்டதால் நான் தயார் செய்துவைத்த பதிலை உடனே கூற அரங்கத்தில் பலத்த கரவொலி.


அடுத்தடுத்த படங்களாக தீபனின் ஆசை, ராகேஷின் ஹீரோ, கல்யாணின் புதியவன், தமிழ் சீனுவின் ஏழரை,அருணின் நாடோடி மன்னன், ரமேஷின் பருதி மாறன், ராஜ்குமாரின் கரை ஆகிய ஒன்பது படங்கள் திரையிடப்பட்டன

படங்களை பார்க்கும் போதே நானாக ஒன்று இரண்டு மூன்று என்று பரிசுக்கனவற்றை வரிசைப்படுத்தி வைத்தவாறு அறிவிப்பை எதிர்நோக்கிகாதிருந்தேன்.

ஒன்று இரண்டு மூன்று பரிசுகளுக்கு முன்பாக மற்ற விருதுகளை கொடுத்தார்கள் அதில் தொடரிலேயே 143 படங்களில் சிறந்த படமாக நண்பர்கள் ரமுவின் முண்டாசுப்பட்டிக்கும், அருண்பிரசாத்தின் கொக்கரக்கோவுக்கும் பரிசு கிதைத்ததும் அப்பாடா திருப்பூருக்கு ஒரு பரிசு கிடச்சுருச்சு என்று சந்தோஷமாக இருந்த்ந்து

அடுத்ததாக சிறந்த அனிமேஷனுக்கான பரிசும் என் நண்பன்ஜெகதீஸ்க்கு எனது அப்துல்லா சிவா டேனியல் படத்துக்காக கிடைத்தது ஆக திருப்பூருக்கு இரண்டு பரிசு இரட்டிப்பு மகிழ்ச்சி

எனது மரண அடி படம் சிறந்த திரைக்கதைக்கான பரிசீலனையில் வந்துபோனது.

எல்லா துணை பரிசுகளும் கொடுத்துமுடித்தபின்னர் ஒன்று இரண்டு மூன்று பரிசுகளுக்கான அறிவிப்பை கொடுக்க தயாரானார்கள் நானும் ஊருக்கு கிளம்ப டைம் பார்த்தபடி அருகேயிருந்த நண்பருடன் பேசிக்கொண்டிருக்க
மூன்றாம் பரிசு ரவிக்குமார் என்ற அறிவிப்பு கேட்டு விக்கித்துப்போனேன்
சரியாத்தான் சொல்றாங்களா எந்திருச்சு கிட்டத்தால போகைல சாரி ரவிக்குமார் இல்லை ராஜ்குமார்னு சொல்லீருவாங்களோனு டவுட்டோட நடந்தேன் அப்போதுதான் படத்தின் பெயர் ஜீரோ கிலோ மீட்டர் என்று கூடவே அறிவித்தார்கள் அப்பாட நாமளேதான் என்று மேடையேற படார் என்று வண்ணக்காதித வெடி வெடித்து திகிலூட்டினார்கள்


மேடையில் பாலச்சந்தர் என்னிடம் கரம் குலுக்கி கழுத்தில் தங்க நாணயத்தை போட்டார் கையில் ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட சிலையை கொடுத்தார் (என்னா வெயிட்டு) பாக்யராஜ்,எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கரம் குலுக்கி வாழ்த்திசொல்லி பாராட்டினார்கள்
பார்த்துக்கொண்டிருந்த என் பெற்றேரின் மனம் நிறைந்திருக்குமென நினைத்து எனக்கு சந்தோஷம் அதிகமாகியது.

அடுத்து இரண்டாம் பரிசு அருண்க்கும்,முதல் பரிசு நண்பன் ரமேஷ்க்கும் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி!

நண்பர்களேடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அன்றிரவே கிளம்பி காலையில் திருப்பூர் வந்துசேர்ந்தோம்

அலைந்த அலைச்சலுக்கும் உழைப்புக்கும் பரிசு கிடைத்ததும் அர்த்தமுள்ளதாக ஆகியது.
இந்த நேரத்தில் இதுவரையிலான எனது பயணத்துக்கு அச்சாணியாக இருந்த நண்பன் சங்கீத்துக்கும்,நண்பன் ஜெகதீஸ்க்கும், ராமுவுக்கும், ஒளிப்பதிவாளர் ஷங்கருக்கும் அரவிந்துக்கும், எடிட்டர் ஜோமினுக்கும், மனோஜ்க்கும், இசையமைப்பாளர் பிரபுஷங்கருக்கும்,வசந்துக்கும் கார்த்திகேயனுக்கும், உழைத்துக்களைத்த கார்த்திக்கும் என் நடிகர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!

அதே சமயம் எனது படங்களுக்கு பிரதிபலன் பாராது பண உதவி செய்த பி.ஆர்.கணேசன் அவர்களுக்கும், கே.பி.கே.செல்வராஜ் அவர்களுக்கும், ஜம்பு அண்ணனுக்கும், திருப்பூர் சேர்தள உறுப்பினர்களுக்கும், ரவி அண்ணன் அவர்களுக்கும் ஏ.ஜே.பிளமண்ட் ராஜ் அண்ணன் விஜய் அண்ணனுக்கும்
என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டவனாவேன்!



படத்தின் வீடியோ ">ஜீரோ கிலோமீட்டர்

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்