ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

நாளைய இயக்குனர் இறுதிப்போட்டியும் பெற்ற பரிசும்!

நண்பர்களே நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி சென்னையில் கலைஞர் அரங்கத்தில் 16.07.2011 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருப்பூரிலிருந்து என் குடும்பத்தினர்கள், நண்பர்கள் என்று சுமார் பதினைந்துபேர் சென்றிருந்தோம் பரி்சுபெறுகிறோமோ இல்லையோ ஒரு அனுபவமாக இருக்கட்டும் என்று துணிந்துதான் அழைத்துசென்றேன்.

நானும் நண்பன் ராமும் திருவிளையாடல் நாகேஷ் போல “எனக்கில்லை..எனக்கில்லை... பரிசு எனக்கில்லை...” என்று புலம்பாத குறையாகத்தான் இருந்தோம்.
அரங்கமும்,அரங்கத்தில் இருந்த கூட்டமும் உண்மையிலேயே என்னை வெட்கப்படவைத்தது இன்னும் கூட சிரத்தையாக உழைத்திருக்கவேண்டுமோ என்று மனம் புளுங்கித்தள்ளியது.


என்ன செய்ய! என்ன எடுத்திருக்கிறேனோ அதுதானே “நான்!” நடப்பதுநடக்கட்டும் என்று போட்டியாளர் பகுதியில் அமர்ந்துகொண்டேன்
என்னுடன் படத்தில் நடித்தகருணா, நிறைமதி, என் தங்கையின் கணவர்,அப்புறம் படத்திற்க்கு தயாரிப்பு செய்த கே.பி.கே.செல்வராஜ் அவர்கள் அமர்ந்துகொள்ள என் பெற்றோரும் உடன் வந்திருந்த உறவினர்களும் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்துகொண்டார்கள்.

மற்றபோட்டியாளர்கள் எல்லாம் நண்பர்கள் குழாம் புடைசூழ ஜேஜேனு அமர்ந்திருந்தார்கள்.
போட்டி தொடங்கியது. பதற்றம் தொற்றிக்கொண்டது!


இந்த இறுதிப்போட்டிக்கு நான் எடுத்திருந்த குறும்படம் படம் “ஜீரோ கிலோமீட்டர்” இதுவரை எடுத்த படங்களிலெயே அதிக செலவிற்க்கும் மன உளைச்சலிலுக்கும் ஆட்பட்டது இந்த படத்திற்க்குத்தான்

முதல்படமாக நண்பன் ராமுவின் “சைனா டீ’ திரையிட்டார்கள் படத்திற்க்கு அரங்கத்தில் பலத்த கரவொலி மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தாலும் மதன் சார் படத்தைப்பற்றி நிறையாக சொல்லாதது சற்று வருத்தமாக இருந்தது.

அடுத்து என் படம் நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டது படம் ஓடிக்கொண்டிருக்கும் போது பாதியில் கரண்ட் கட்டாகிவிட்டது எனக்கு குழப்பத்தையும் படபடப்பையும் அதிகப்படுத்தியது மீண்டும் படத்தை திரையிட 5நிமிடம் தாமதமாகியது படம் முடிந்ததும் அரங்கத்தில் கிடைத்த கைதட்டல் என் காதுகளுக்கு கேட்கவில்லை ஒருவித பீதி முகத்தில் அப்பியதால் நிகழ்ச்சி தொகுப்பாளினி “என்ன ரவி ரொம்ப டென்சனாகிட்டீங்க நீங்க கூலானாதான் பேசுவேன்” என்று கூற
என்ன சொல்றது எல்லாம் எல்லாம் தெருஞ்சா பண்றேன் ஒருவழியா சரியாகி பிரதாப் சார் நல்லாருக்குனு சொல்ல மைக் மதன் சாருக்கு போச்சு அவர் படம் ஓபனிங் செண்டர் பினிசிங்னு கம்ப்ளீட்டா இருக்குனு சொன்னார் அப்புறம் ஒரு டவுட் கேட்டார் “இங்கிருந்து சென்னை போறவங்க அங்கிருந்து வர வழிய ஒன்னும் பண்ணலயா?” என்றார் எனக்கு இந்த கேள்வி கேட்பார் என்று முன்னமே மனதுக்கு பட்டதால் நான் தயார் செய்துவைத்த பதிலை உடனே கூற அரங்கத்தில் பலத்த கரவொலி.


அடுத்தடுத்த படங்களாக தீபனின் ஆசை, ராகேஷின் ஹீரோ, கல்யாணின் புதியவன், தமிழ் சீனுவின் ஏழரை,அருணின் நாடோடி மன்னன், ரமேஷின் பருதி மாறன், ராஜ்குமாரின் கரை ஆகிய ஒன்பது படங்கள் திரையிடப்பட்டன

படங்களை பார்க்கும் போதே நானாக ஒன்று இரண்டு மூன்று என்று பரிசுக்கனவற்றை வரிசைப்படுத்தி வைத்தவாறு அறிவிப்பை எதிர்நோக்கிகாதிருந்தேன்.

ஒன்று இரண்டு மூன்று பரிசுகளுக்கு முன்பாக மற்ற விருதுகளை கொடுத்தார்கள் அதில் தொடரிலேயே 143 படங்களில் சிறந்த படமாக நண்பர்கள் ரமுவின் முண்டாசுப்பட்டிக்கும், அருண்பிரசாத்தின் கொக்கரக்கோவுக்கும் பரிசு கிதைத்ததும் அப்பாடா திருப்பூருக்கு ஒரு பரிசு கிடச்சுருச்சு என்று சந்தோஷமாக இருந்த்ந்து

அடுத்ததாக சிறந்த அனிமேஷனுக்கான பரிசும் என் நண்பன்ஜெகதீஸ்க்கு எனது அப்துல்லா சிவா டேனியல் படத்துக்காக கிடைத்தது ஆக திருப்பூருக்கு இரண்டு பரிசு இரட்டிப்பு மகிழ்ச்சி

எனது மரண அடி படம் சிறந்த திரைக்கதைக்கான பரிசீலனையில் வந்துபோனது.

எல்லா துணை பரிசுகளும் கொடுத்துமுடித்தபின்னர் ஒன்று இரண்டு மூன்று பரிசுகளுக்கான அறிவிப்பை கொடுக்க தயாரானார்கள் நானும் ஊருக்கு கிளம்ப டைம் பார்த்தபடி அருகேயிருந்த நண்பருடன் பேசிக்கொண்டிருக்க
மூன்றாம் பரிசு ரவிக்குமார் என்ற அறிவிப்பு கேட்டு விக்கித்துப்போனேன்
சரியாத்தான் சொல்றாங்களா எந்திருச்சு கிட்டத்தால போகைல சாரி ரவிக்குமார் இல்லை ராஜ்குமார்னு சொல்லீருவாங்களோனு டவுட்டோட நடந்தேன் அப்போதுதான் படத்தின் பெயர் ஜீரோ கிலோ மீட்டர் என்று கூடவே அறிவித்தார்கள் அப்பாட நாமளேதான் என்று மேடையேற படார் என்று வண்ணக்காதித வெடி வெடித்து திகிலூட்டினார்கள்


மேடையில் பாலச்சந்தர் என்னிடம் கரம் குலுக்கி கழுத்தில் தங்க நாணயத்தை போட்டார் கையில் ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட சிலையை கொடுத்தார் (என்னா வெயிட்டு) பாக்யராஜ்,எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கரம் குலுக்கி வாழ்த்திசொல்லி பாராட்டினார்கள்
பார்த்துக்கொண்டிருந்த என் பெற்றேரின் மனம் நிறைந்திருக்குமென நினைத்து எனக்கு சந்தோஷம் அதிகமாகியது.

அடுத்து இரண்டாம் பரிசு அருண்க்கும்,முதல் பரிசு நண்பன் ரமேஷ்க்கும் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி!

நண்பர்களேடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அன்றிரவே கிளம்பி காலையில் திருப்பூர் வந்துசேர்ந்தோம்

அலைந்த அலைச்சலுக்கும் உழைப்புக்கும் பரிசு கிடைத்ததும் அர்த்தமுள்ளதாக ஆகியது.
இந்த நேரத்தில் இதுவரையிலான எனது பயணத்துக்கு அச்சாணியாக இருந்த நண்பன் சங்கீத்துக்கும்,நண்பன் ஜெகதீஸ்க்கும், ராமுவுக்கும், ஒளிப்பதிவாளர் ஷங்கருக்கும் அரவிந்துக்கும், எடிட்டர் ஜோமினுக்கும், மனோஜ்க்கும், இசையமைப்பாளர் பிரபுஷங்கருக்கும்,வசந்துக்கும் கார்த்திகேயனுக்கும், உழைத்துக்களைத்த கார்த்திக்கும் என் நடிகர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!

அதே சமயம் எனது படங்களுக்கு பிரதிபலன் பாராது பண உதவி செய்த பி.ஆர்.கணேசன் அவர்களுக்கும், கே.பி.கே.செல்வராஜ் அவர்களுக்கும், ஜம்பு அண்ணனுக்கும், திருப்பூர் சேர்தள உறுப்பினர்களுக்கும், ரவி அண்ணன் அவர்களுக்கும் ஏ.ஜே.பிளமண்ட் ராஜ் அண்ணன் விஜய் அண்ணனுக்கும்
என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டவனாவேன்!படத்தின் வீடியோ ">ஜீரோ கிலோமீட்டர்

ஞாயிறு, 24 ஜூலை, 2011

நாளைய இயக்குனர் இறுதிப்போட்டிக்குமுன்

நண்பர்களே நாளைய இய
க்குனர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை வந்துவிட்டேன்.
இதுவரை வந்ததில் கற்றதும், பெற்றதும் ஏராளம்.


ஒவ்வொருமுறையும் திருப்பூரிலிருந்து
அடித்து பிடித்து சென்னை செல்வது
சிரம்மாக இருந்த்தாலும் சுகமா அனுபவம்தான்.நாளைய
இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் சென்னை எனக்கு இ
ன்னும் அந்நியமாகவே இரு
ந்த்திருக்கும்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சார் அவர்கள் எழுதியிருந்த்ததுபோலவே சென்னை செல்லும் இல்லமற்ற யாவரும் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சனையான கழிப்பதும், குளிப்பதும்

நானும் அதை எதிர்கொண்டேன். அப்புறம், இசையமைத்துக்கொடுத்த நண்பர் வசந்த் அறிமுகத்தால் தங்குமிடம் பிரச்சனை தீர்ந்தது அதற்குப்பின்னர் தற்போது எடிட்டர் ஜோமின் அறை வேடந்தாங்கலாக இருக்கிறது.

ஆரம்ப நாட்களின் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பேசமுடியவில்லை.
நிகழ்ச்சி முடிந்த்ததும் அவசர அவசர
மாக திருப்பூர் கிளம்பிவந்துவிடுவதாலும் இரண்டு மூன்று சுற்றுவரையிலும் சக போட்டியாளர்கள் யாராரென்றுகூட தெரிந்துகொள்ள முடியவில்லை.


அரையிருதி சுற்று முடிந்த்ததும்தான் எல்லோருடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது.

இப்போது இறுதிப்போட்டிக்கு நுழையும் பத்து போட்டியாளர்களுமே நண்பர்களாக ஆகிவிட்டார்கள்
(நான்,ராம்,அருண்,ராகேஷ்,ரமேஸ்,கல்யாண்)


1.ராம் -- நீண்டகால நண்பர்களாக இருக்கிறோம்.
நான் பார்த்தவரையில் ராம் எதையும் டீடெயிலாக செய்யக்கூடியவர். விசுவல் திங்கிங் உள்ளவர். கூடவே கார்டூனிஸ்ட் வேறு.
மனதில் நினைப்பதை வெளிப்படையாக பேசாததே இவரது குறை. (திருப்பூரில் இருந்து நாங்களிருவரும் ஒன்றாகத்தா
ன் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம்)

2.ரமேஷ் - நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த மிக நெருக்கமான நண்பர்.
இவருடைய ஸ்பெசலே வெளியே யோசிப்பதாக, குழப்பமாக இருப்பதாக சொல்வது (இவர் என்ன செய்யப்போகிறார் என்று முடிவெடுத்துவிட்டு பிறகுதான்!!!? ) பிறகு கடைசியில் தீர்க்கமாக படம் கொடுப்பார். குழப்பமில்லாத ஸ்ராங் மேன்!

3.அருண்குமார் - நான் பார்த்து மிகவும் ரசித்த படங்களை எடுத்த இயக்குனர். அதிகமாக இவருடன் பழகியதில்லை பழகவேண்டுமென்று ஆசைப்படுமளவு இருப்பவர்.
பெரிய ஆளாக வருவார்.
இவரோடு ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பின்னால் பெருமையளிக்கும் விசயமாக இருக்கப்போகிறது பாருங்கள்.

4.கல்யாண் - இவர் சாதாரணமான மனிதரே இல்லை. அசாதாரணமானவர்.
நாங்களெல்லாம் ஒரு படத்தை முடிக்க பணத்தாலும், மனதாலும் சிரமப்பட்டுகொண்டிருக்கும்போது அவை இரண்டையும் சர்வசாதாரணமாக கையால்பவர்.
இனிக்க,இனிக்க பேசும் இனிமையான நண்பர்.
என்றென்றும் இவரோடான நட்பு தொடரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!


5.தீபன் -- எப்போதும் காலில் ஷீவேடும், மழித்த கன்னங்களும், நுனிநாக்கு ஆங்கிலம்,டக் இன் பன்னிக்கொண்டு ஐ.டிஇளைஞராக (உண்மையிலையேயே) வலம் வருபவர். தனக்கெனஒரு சினிமா பாணி வேண்டுமென்பதில் முனைப்புடன் செயலாற்றுபவர். வெற்றி தோல்விகளை சமமாக சந்தித்திருந்தாலும் உற்சாகமாக வலம் வருபவர். nice man!

6.ராகேஷ் -- இவரும் ஒருவகையில் தீபனை போலவே இருப்பார். ஆங்கிலப்படங்களைப்போல ஒரு ஸ்டைல் இவரது படங்களில் தெரியும். ஆரம்ப நாட்களில் இவரோடு பழகாமல் விட்டுவிட்டோமே என்று இப்போது வருந்துகிறேன். உதவிக்கரம் நீட்டுவதில் தயங்காதவர். எனக்கு பிடித்தவர்.

7.ராஜ்குமார் -- இவரை பார்த்து ஆரம்ப நாட்களில் கொஞ்சம் பொறாமைப்பட்டது உண்மை. இவரோடு சேர்த்து நம்மை போட்டிக்கு விட்டுவிடக்கூடாது என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். இவருக்கென்று ஒரு குழு ஸ்பெசலாக இருக்கிறது. நச்சென்று படம் எடுப்பவர் . இவரோடு சேர்ந்தாற்போல ஐந்துவார்தைகளுக்குமேல் பேசியதில்லை அதுவும் இப்போதுதான். ஆளுமை மிக்கவர்.

8.அழகுராஜ் - -- இவர் நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநராகவும் இருப்பதால் நான் அதிகம் பேசியது இவரோடுதான். வெளிப்படையான வெகுளியான நல்ல நண்பர்.
எத்தனையோ வேலைகளுக்கு மத்தியில் படம் பண்ணியவர். குடுமி வைத்த மஹிழ்ச்சியான அண்ணன்!

9.தமிழ்சீனு -- இவர் ஹைத்ராபாத்தில் இருந்த்து வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செல்பதாலும் என்னவோ இவரோடு சொற்பமாகதான் பேசியிருக்கிறேன். இனிமையானவர். ”மிரட்டலான” மேக்கிங்கில் படம் எடுப்பவர். சவுண்ட் இஞ்சினியராக இருக்கிறார்.

10.நான்

போட்டியாளர்கள் எல்லோரும் ஒரு காலைப்பொழுதில் ஒன்றாக தி நகர் நடேசன் பூங்காவில் அடுத்து இறுதிப்போட்டிக்கு தயாராகும் முன்னோட்டமாக ஒரு ஜாலியான கலந்துரையாடல்

இது தவிர நிகழ்ச்சிக்கு வந்து அறிமுகமாகி என்னோடு பயணித்த
ஒளிப்பதிவாளர்-அரவிந்த், -சங்கர்
இசையமைப்பாளர்-வசந்த்,- பிரபுசங்கர்
எடிட்டர்- மனோஜ்,- ஜோமின்

மற்றும்ஆரம்பகாலம் தொட்டு எனக்கு மனதளவிலும் உற்றநண்பனாக இருக்கும் ”கிராபிக்ஸ்” ஜெகதீசன்

ஆகிய எல்லோருடனும் நீண்டகாலம் பயணிக்க இதுவொரு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன்!.


இப்போது இறுதிப்போட்டிக்குள் நுழைகிறோம்.
வெற்றிபெற கடுமையாக உழைக்கவேண்டும்.

வெற்றி யாருக்காக இருந்தாலும் காழ்ப்புணர்ச்சியின்றி நட்பு என்றென்றும் தொடரும்...
செவ்வாய், 19 ஜூலை, 2011

நாளைய இயக்குனர் அரையிருதிப்போட்டியில் எனது படம் “பார்வதியக்கா”

நண்பர்களே கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் அரையிருதிப்போட்டியில் “கிராமத்து கதைகள்” என்பது தலைப்பு.


கிராமத்துக்கதைகளுக்காக ஏராளமான சிறுகதைகளை படித்து
சோர்ந்ததில் ”சேர்தளம்” நூலகத்தின் உதவியால் “ஜெயந்தனின் கதைகள்”ல் இருந்து படித்த
“கடலடிப்பிரவாகம்” சிறுகதை எனக்கு பிடித்திருந்தது

அந்த கதையை தழுவி சிலபல மாறுதல்களை செய்து எடுத்த படம்தான் “பார்வதியக்கா”
சத்தியமங்கலத்தில் சிக்கரசம்பாளையத்திலும்
, பெரியகுளத்திலும் மூன்றுநாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.
ஏராளமான நண்பர்களின் உதவியே இந்த
படம் உருவாவதற்கு அடித்தளம்!

ஒளிப்பதிவாளர் ஷங்கரின் உழைப்புக்கு படம் நிகழ்ச்சியில் சிறந்த ஒளிப்பதிவிற்கான பரிசை பெற்றது.

படத்தை பாருங்கள் உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்!

parvathiyakkaa short film

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

நாளைய இயக்குனர் கால்இறுதி சுற்றில் நான் “அப்துல்லா சிவா டேனியல்”

நண்பர்களே கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கால் இறுதி சுற்றில் “ஆக்சன் கதைகள்” தலைப்பிற்காக நாங்க எடுத்த படம் “அப்துல்லா சிவா டேனியல்”.

ஆக்சன் கதை என்றதுமே பற,பறவென்று ஒரு கதை பண்ணலாம் என்று உள்ளூர நிறைய ஆசை. அதற்க்காக ஒரு ஆக்சன் சீன் பிடித்தால் கதை அமையைல்லை சரி கதை பிடித்துவிட்டு அதில் ஆக்சன் சேர்க்கலாம் என்றால் அப்பிடியான ஆக்சன் கதை கிடைக்கவில்லை.

படத்தை சமர்ப்பிக்கும் நாளும் நெருங்கிவிட்டது. இனி வேறுவழிகிடயாது ஏதாவது கதை பிடித்தேஆகவேண்டுமென்ற இக்கட்டு.
“சே” என்னடா இது என்று ஆகிவிட்டது.
ஒவ்வொரு முறையும் அடுத்தபடத்தை அப்படி எடுக்கவேண்டும்,இப்படி எடுக்கவேண்டுமென்று நினைத்து எப்படியும் எடுக்கமுடியாமல் மொட்டதாசன் குட்டையில் விழுந்த கதையாக திரும்ப,திரும்ப குழப்பம்,குழப்பம் மேலும் குழப்பம்!

”ஒரு கிராமத்தில் கூலிப்படையை சேர்ந்த ஒருவன் பஞ்சாயத்துத்தலைவரை கொல்வதற்க்காக செல்கிறான் அதுதான் அவனது முதல் கொலை முயற்ச்சி” என்று அந்த கதை களனில் ஒரு கதை யோசித்து இருந்தேன் கேட்டவர்களெல்லாம் அது அதரபழைய மேட்டர் என்றார்கள் அதையும் தூக்கிதூர கடாசிவிட்டு அமர்ந்திருந்தேன். சிறுகதைகளில் ஆக்சன் வகையை சேர்ந்த
சிறுகதைகளே நான் படித்தவரை கிடைக்கவில்லை.

கேபிள் சங்கை அவர்களின் “அப்துல்லா சிவா டேனியல்” சிறுகதையை பிளாக்கில் வந்தபோதே படித்திருக்கிறேன் அந்த கதை மீது எனக்கு அவ்வளவு ஒட்டுதல் இல்லை. இப்போது அந்த கதையை நண்பர்களிடம் கூறியதில் “நல்லாருக்கே” என்றார்கள் எனக்கும் இப்போது ஓகே என்று பட்டது

ரெடி ஸ்டார்ட்....


எடுத்து சேர்த்துவதற்க்குள் போதும்,போதுமென்றாகிவிட்டது.நண்பன் ஜெகதீஸ்ன் கிராபிக்ஸ் படத்திற்க்கு பலம் அவனை இன்னும் முழுமையாக பயன்படுத்தவே இல்லை.

படத்திற்க்குள் இரண்டு கார் வருகிறது அந்த காரை கொடுத்து உதவி அதற்கு டீசலும் போட்டுகொடுத்த “ராஜ் அண்ணன்” அவர்களுக்கு பெரும்நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்! அதுபோலவே படத்திற்கு பெரும் பங்களிப்பு செய்த “ஜம்பு அண்ணன்” ”திருப்பூர் சேர்தளம் தலைவர் வெயிலான், பி.ஆர்.ஓ முரளிகுமார் அவர்களுக்கும் உறுப்பினகளுக்கும் நண்பன்“சங்கீத்குமார்” “ஒளிப்பதிவாளர் சங்கர்” போன் குணா” சைலோ கார் கொடுத்த அண்ணன் எல்லோருக்கும் நன்றிகள்!

படத்தை பாருங்கள் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
">>ABDULLAAH SIVA DANIEL SHORT FILM


">நிகழ்ச்சி பகுதி1

">நிகழ்ச்சி பகுதி2

">நிகழ்ச்சி பகுதி3
">நிகழ்ச்சி பகுதி4

திங்கள், 14 மார்ச், 2011

”நாளைய இயக்குனரில்” எனது குறும்படம் “பசி” 13.03.11

நண்பர்களே நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கால் இறுதிக்குமுந்தைய ”டிராஜிடி சுற்றில்” ஒளிபரப்பான எனது குறும்படம் “பசி”. இக்குறும்படம் எழுத்தாளர் கே.ராஜாராம் அவர்களின் பசி சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
சோகமான கதை என்றவுடன் சிறுகதை புத்தகங்களை அடுக்கடுக்காக புரட்டியதில் சோகமே மிஞ்சியது.
எனது குறும்பட ஆக்கத்திற்கு தேவையானற்போல் எதும் அமையவில்லை.
நண்பர் பக்ருதீன் கே.ராஜாராம் அவர்களின் இந்த கதையை கூறினார்.பளிச் என்று இருந்த ஒரு ஐடியா எனக்குபிடித்திருந்தது.
படப்பிடிப்பிற்காக ஒரு தொடக்கப்பள்ளியில் அனுமதிகேட்டு போக அந்த அனுமதிவால் நீண்டுகொண்டேபோய் சென்னையில் நின்றது.


இனி முடியாது வேறுகதை எடுத்துக்கொள்ளலாம் என்றிருந்தபோது ஆபத்பாந்தனாய் உதவினார் படத்தின் கேமராமேன் ஷங்கர். அவரது ஊரான சத்தியமங்கலத்தில் படத்தை முடித்தோம்.

படத்தை பாருங்கள் உங்கள் மேலான விமர்சனத்தை பதிவு செய்யுங்கள்.
நன்றி!

">குறும்படம்தொலைக்காட்சி நிகழ்ச்சி ">பகுதி1

">பகுதி2

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

”நாளைய இயக்குனரில்” எனது குறும்படம் “மரண அடி” 30.01.11

நண்பர்களே நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டி சுற்றுக்கான எனது பிரிவு “எழுத்தாளர்களின் சிறுகதையை அடிப்படையாக கொண்ட படம்” அதற்காக நான் எடுத்த படம் “மரண அடி”. எழுத்தாளர் ச.அறிவழகன்.

எழுத்தாளர் சிறுகதை என்றவுடன் எளிதாக ஏதேனுமொரு கதையை எடுத்துவிடலாமென்றென்னியிருந்தது தவறு என்று புரிய பத்து நாள் ஆனது.
பெரும் குழப்பம் பிடித்து ஆட்டியது. இறுதியாக எஸ்.சங்கரநாராயணன் சார் அவர்கள் எழுத்தாளர் ச.அறிவழகன் அவர்களின் மரண அடி சிறுகதையை பரிந்துரைத்தார். எனக்கு அந்த கதையிலும் பிடிப்பு ஏற்படாதிருந்தபோது நலன் சார் அவர்கள் உறுதியாக ”இந்த கதையை எடு ரவி” என்றார்.
கதையை பரிந்துரைத்த எஸ்.சங்கரநாராயணன் சார் அவர்களே எழுத்தாளர் ச.அறிவழகன் அவர்களை 10ஆண்டுகளாக சந்திக்க இயலாமல் இருந்தார். முகவரி மாறியதால் தொடர்பும், தொடர்பு எண்னும் விடுபட்டு போயிருந்தது.
இந்த கதையை படமாக்க எழுத்தாளர் ச.அறிவழகன் அவரிடம் அனுமதி வாங்கவேண்டி நான் முயர்ச்சித்து அவரது தொடர்பை கண்டுபிடித்தேன். தோழர் ராமு அவர்கள்தான் அதற்கு உதவினார். அவருக்கு நன்றி! டப்பிடிப்புக்கு முந்தைய நாள்தான் கதையின் எழுத்துப்பிரதி கிடைத்தது.

கதையில் எனக்கு ஏற்றாற்போல மாற்றியமைத்து படமாக்கினேன்.

படப்பிடிப்பு ஒருநாளிலே முடிந்தது. கிராபிக்ஸ் வேலைகள் மட்டும் 15நாள் பிடித்தது. படத்தில் எரியும் நெருப்பு 60% கிராபிக்ஸ்தான். பிணம் எழுவதும், முகத்தில் ஊறும் ஈயும் கிராபிக்ஸ்ல்தான் போட்டோம். கிராபிக்ஸ் ஜெகதீஸ். படத்தில் வெட்டியாணாக நடித்த தோழர் ராமு அவர்கள் ஏற்கனவே “பூ” படத்தில் பேனாக்காரராக நடித்திருக்கிறார். மகனாக நடித்த ரமேஷ் சென்னை சூரியன் எப்.எம்,இல் ரேடியோ ஜாக்கியாய இருக்கிறார்.

கிராபிக்ஸ்- ஜெகதீஸ் 9994506013
ஒளிப்பதிவு-அரவிந்குமார் 9894593945
இசை-வசந்த் 9600883888
படத்தொகுப்பு-ராம் 9843788198
இயக்கம்-ரவிக்குமார் 9894982525

பார்த்துவிட்டு உங்கள்
மேலான கருத்துக்களை கூறுங்கள்!

">மரண அடி


தொலைக்காட்சி நிகழ்ச்சி முழுதும்.

">பகுதி-1

">பகுதி-2

">பகுதி-3

">பகுதி-4