போஸ்டர் நாளைய இயக்குனர் இரண்டாவது சுற்று

நண்பர்களே கலைஞர் தொலைக்காட்சியின் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டி சுற்றில் எனக்கு கொடுக்கபட்ட பிரிவு “போலீஸ்”.
போலீஸ் என்றது எந்த மாதிரி படம் எடுக்கலாம் என்று பல யோசனைகள் முடிவுக்கு வருவதென்பது பெரும்பாடாய்போய்விட்டது.
எப்படியும் உடன்வரக்கூடிய போட்டியாளர்கள் “காக்க காக்க” போல என்கவுண்டர்களாய் போட்டு தள்ளுவார்கள் என்று புலப்பட்டது.

ஓகே நம்ம படத்துல துப்பாக்கியே வரக்கூடாது என்று முடிவு செய்தேன்.
அதற்காக ரொம்பவும் காமெடி படமும் பண்ண முடியாது ஏன்னா எனக்கு காமெடி படம் எடுக்க வருமானு எனக்கே தெரியாது.
எழுத்தாளர்களது சிறுகதைகளை அடிப்படையாய் வைத்தே குறும்படம் செய்வதென்பது நான் முன்பே திட்டமிட்ட முடிவு.

முந்தைய படம் போல எ.எ.ஹெச்.கே கோரி அவ்ர்களது சிறுகதைகளை புரட்டியதில் எதிற்பார்ப்புக்கு ஈடாகவில்லை.
அப்படி,இப்படி யோசனை அதற்கிடையே கேபிள் சங்கர் சாரிடம் கதைபற்றி கேட்கையில் அவர் “போஸ்டர்” கதையை பரிந்துரைத்தார்.
இதற்கிடையே போலி என்கவுண்டர் கதை ஒன்றும் மனதில் உறுவேறிக்கொண்டிருந்தது.

சரி என்கவுண்டர் வேண்டாம் துப்பாக்கி இல்லாது நினைத்தபடியே இருந்த “போஸ்டர்” சிறுகதையையே படம் எடுக்க முடிவு செய்தேன்.
கேபிள் சங்கர் சாரே திரைக்கதை அமைத்து தருகிறேன் என்றார்.
கதை,திரைக்கதை,வசனம் கேபிள் சங்கர் என்று டைட்டில் கார்டு மனதில் ஓடியது.

முழு படப்பிடிப்பும் திருப்பூரில் எங்க ஏரியாவிலேயே எடுக்கப்பட்டது.
படத்தில் வரும் வீடு எங்க வீடு, அங்கிருக்கும் இரண்டு பெண்களாய் இடையே நடந்து போவது ஒன்று நான்,மற்றொன்று நண்பர் ராம் (ஆர்டிஸ்ட் செலவு மிச்சம்)
இரவு நேரப்படப்பிடிப்பு அதிகாலை 4மணியை தொட்டது. போலீஸ் ஜீப்பில் இருக்கும் சைரன் லைட்கூட கிரபிக்ஸ்ல் போட்டதுதான்.
இடையே நிஜமாலும்! போலீஸ் வந்து போலீஸ் ஜீப், டிரஸ் சகிதம் ரோட்டிலே நிக்கற எங்களிடம் எதாவது பிரச்சனை ந்டக்குமோனு பயத்துலயேதான் படம் எடுத்தேன், ஏன்னா ஒட்டீருக்கற போஸ்டர் அப்பிடி!!!

எப்படியோ இரண்டு நாள் சூட்டிங் முடிந்தது.எடிட்டிங் முடிந்து முழு திருப்தி இல்லை.இன்ஸ்பெக்டராய் நடித்தவருக்கு கேபிள் சங்கர் சார்தான் டப்பிங் கொடுத்தார் அதனாலேயே நடிப்பிலிருந்த குறை மறைக்கப்பட்டது.டப்பிங் போதுதான் சென்னை வந்து கேபிள் சங்கர் சாரிடம் படத்தை காண்பித்தேன், உள்ளூர ஒரு பயம் கதையை அவர்நினைத்தது போல் அல்லாமல் சொதப்பல்னு கமெண்ட் வாங்கீருவனே என்று. படம் பார்த்தார் சில குறைகளை சுட்டிக்காண்பித்தார். எனக்கும் சரியாவே பட்டது. அதானே வளர்ச்சி!
கதை சுவாரஸ்யமாக இருக்கும் மேக்கிங் பற்றிய குறைகள் தெரியாது என்று நினைத்தேன் அது போலவே நிகழ்ச்சியில் படமும் நல்ல கமெண்ட் வாங்கிருச்சு.
இதிலிருந்து பல விசயங்களை கத்துக்கிட்டேன்.

எழுத்து-பி.சங்கர்நாராயணன் (கேபிள் சங்கர்)
இயக்கம்-ஆர்.ரவிக்குமார்
ஒளிப்பதிவு-அரவிந்குமார்
இசை-வசந்த்
எடிட்டிங்-ராம்
கிராபிக்ஸ்-ஜெகதீஸ்

படம் பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்!

">poster short film


(தொலைக்காட்சியில் வந்த முழு நிகழ்ச்சியும் கீழே)

">பகுதி1

">பகுதி2
">
பகுதி3

">
பகுதி4

கருத்துகள்

  1. I like very much,well done,keep it up - saravanakumar (newagefashions)

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் பாஸ்

    மேக்கிங் & ஸ்க்ரீன்ப்ளே வெல்டன் கீப் இட் அப்!

    பதிலளிநீக்கு
  3. வழக்கமான துப்பாக்கி, எங்கவுண்ட்டர், 'அவன போட்ரவா' க்ளிஷேக்கள் இல்லாமல் வித்யாசமான முயற்சியாக இருந்தது நண்பரே, வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் நண்பரே. போஸ்டர் அருமையாக வந்திருக்கிறது. மேன் மேலும் சிகரங்கள் தொட மனமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்..பிடித்திருக்கிறது.. கலக்குங்கள்..

    பதிலளிநீக்கு
  6. அருமையான முயற்சி.. தொடரட்டும் பல வெற்றிகள்.. படைப்பில் ஒரு நேர்த்தி தெரிகிறது. வெற்றியை நோக்கிய உங்களது பயணத்தில் இது ஒரு உற்சாகமாய் இருக்கும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் அண்ணா ., ஞாயிற்றுக்கிழமை எனக்கு நேரம் கிடைக்கல .,
    ஆனா நாளைக்கு இரோவு மறு ஒளிபரப்பு பண்ணுவாங்க . அப்பட கண்டிப்பா பாக்குறேன் ..!

    பதிலளிநீக்கு
  8. இந்த வீடியோ நல்ல குவாலிட்டி ரவி இதேபோல அப்டேட் பண்ணுங்க...

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. i saw ur filw on net.its not equal ur 1st film avan,avarkal,athu. but character selection,screenplay,dialogs very well handles on this film. i expect u more then this film on ur neat film.

    பதிலளிநீக்கு
  11. அருமை.... ரசிக்கும்படி இருந்தது... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் ரவி. படமும் அருமை

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்