ஞாயிறு, 5 டிசம்பர், 2010

போஸ்டர் நாளைய இயக்குனர் இரண்டாவது சுற்று

நண்பர்களே கலைஞர் தொலைக்காட்சியின் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டி சுற்றில் எனக்கு கொடுக்கபட்ட பிரிவு “போலீஸ்”.
போலீஸ் என்றது எந்த மாதிரி படம் எடுக்கலாம் என்று பல யோசனைகள் முடிவுக்கு வருவதென்பது பெரும்பாடாய்போய்விட்டது.
எப்படியும் உடன்வரக்கூடிய போட்டியாளர்கள் “காக்க காக்க” போல என்கவுண்டர்களாய் போட்டு தள்ளுவார்கள் என்று புலப்பட்டது.

ஓகே நம்ம படத்துல துப்பாக்கியே வரக்கூடாது என்று முடிவு செய்தேன்.
அதற்காக ரொம்பவும் காமெடி படமும் பண்ண முடியாது ஏன்னா எனக்கு காமெடி படம் எடுக்க வருமானு எனக்கே தெரியாது.
எழுத்தாளர்களது சிறுகதைகளை அடிப்படையாய் வைத்தே குறும்படம் செய்வதென்பது நான் முன்பே திட்டமிட்ட முடிவு.

முந்தைய படம் போல எ.எ.ஹெச்.கே கோரி அவ்ர்களது சிறுகதைகளை புரட்டியதில் எதிற்பார்ப்புக்கு ஈடாகவில்லை.
அப்படி,இப்படி யோசனை அதற்கிடையே கேபிள் சங்கர் சாரிடம் கதைபற்றி கேட்கையில் அவர் “போஸ்டர்” கதையை பரிந்துரைத்தார்.
இதற்கிடையே போலி என்கவுண்டர் கதை ஒன்றும் மனதில் உறுவேறிக்கொண்டிருந்தது.

சரி என்கவுண்டர் வேண்டாம் துப்பாக்கி இல்லாது நினைத்தபடியே இருந்த “போஸ்டர்” சிறுகதையையே படம் எடுக்க முடிவு செய்தேன்.
கேபிள் சங்கர் சாரே திரைக்கதை அமைத்து தருகிறேன் என்றார்.
கதை,திரைக்கதை,வசனம் கேபிள் சங்கர் என்று டைட்டில் கார்டு மனதில் ஓடியது.

முழு படப்பிடிப்பும் திருப்பூரில் எங்க ஏரியாவிலேயே எடுக்கப்பட்டது.
படத்தில் வரும் வீடு எங்க வீடு, அங்கிருக்கும் இரண்டு பெண்களாய் இடையே நடந்து போவது ஒன்று நான்,மற்றொன்று நண்பர் ராம் (ஆர்டிஸ்ட் செலவு மிச்சம்)
இரவு நேரப்படப்பிடிப்பு அதிகாலை 4மணியை தொட்டது. போலீஸ் ஜீப்பில் இருக்கும் சைரன் லைட்கூட கிரபிக்ஸ்ல் போட்டதுதான்.
இடையே நிஜமாலும்! போலீஸ் வந்து போலீஸ் ஜீப், டிரஸ் சகிதம் ரோட்டிலே நிக்கற எங்களிடம் எதாவது பிரச்சனை ந்டக்குமோனு பயத்துலயேதான் படம் எடுத்தேன், ஏன்னா ஒட்டீருக்கற போஸ்டர் அப்பிடி!!!

எப்படியோ இரண்டு நாள் சூட்டிங் முடிந்தது.எடிட்டிங் முடிந்து முழு திருப்தி இல்லை.இன்ஸ்பெக்டராய் நடித்தவருக்கு கேபிள் சங்கர் சார்தான் டப்பிங் கொடுத்தார் அதனாலேயே நடிப்பிலிருந்த குறை மறைக்கப்பட்டது.டப்பிங் போதுதான் சென்னை வந்து கேபிள் சங்கர் சாரிடம் படத்தை காண்பித்தேன், உள்ளூர ஒரு பயம் கதையை அவர்நினைத்தது போல் அல்லாமல் சொதப்பல்னு கமெண்ட் வாங்கீருவனே என்று. படம் பார்த்தார் சில குறைகளை சுட்டிக்காண்பித்தார். எனக்கும் சரியாவே பட்டது. அதானே வளர்ச்சி!
கதை சுவாரஸ்யமாக இருக்கும் மேக்கிங் பற்றிய குறைகள் தெரியாது என்று நினைத்தேன் அது போலவே நிகழ்ச்சியில் படமும் நல்ல கமெண்ட் வாங்கிருச்சு.
இதிலிருந்து பல விசயங்களை கத்துக்கிட்டேன்.

எழுத்து-பி.சங்கர்நாராயணன் (கேபிள் சங்கர்)
இயக்கம்-ஆர்.ரவிக்குமார்
ஒளிப்பதிவு-அரவிந்குமார்
இசை-வசந்த்
எடிட்டிங்-ராம்
கிராபிக்ஸ்-ஜெகதீஸ்

படம் பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்!

">poster short film


(தொலைக்காட்சியில் வந்த முழு நிகழ்ச்சியும் கீழே)

">பகுதி1

">பகுதி2
">
பகுதி3

">
பகுதி4

செவ்வாய், 30 நவம்பர், 2010

”நாளைய இயக்குனரில்” நண்பன் ராம் 24.10.2010

கலைஞர் தொலைக்காட்சி நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நானும் என் நண்பன் ராமுவும் பங்கேற்றிருக்கிறோம். அதன் இரண்டாவது சுற்றில் “காதல்” தலைப்பில் எனது நண்பன் ராம் எடுத்த படம் “பிப்ரவரி 14” 2டி அனிமேசனினில் உண்மை பிம்பங்களை ஒன்றினைத்து உருவாக்கினேம்.
நான் இந்த படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினேன். 2டி அனிமேசன் வேலைகளை ராமும் 3டி அனிமேசன் வேலைகளை நண்பன் ஜெகதீஸ்ம் மேற்கொண்டார்கள்.ஓளிப்பதிவு அரவிந்குமார், படத்தொகுப்பு,இயக்கம் ராம்
கதை உருவாக்கத்தில் நண்பன் ஏ.ஆர்.கே.சரவண் உதவி செய்தார்.
இந்த படம் திரையிட்ட போது நடுவர்கள் மதன் அவர்களும் , பிரதாப்போத்தன் அவர்களும் மிக சிறப்பாக பாராட்டினார்கள் நிகழ்ச்சியையும் நடுவர்களின் கருத்துக்களையும் கீழே இணைத்துள்ள வீடியோவில் பாருங்கள் உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்!

">பகுதி1

">பகுதி2

">பகுதி3

">பகுதி4

நன்றி!

புதன், 29 செப்டம்பர், 2010

”நாளைய இயக்குனரில்” நான்

நண்பர்களே ”நாளைய இயக்குனரில்” நான் பங்கேற்ற நிகழ்ச்சி கடந்த 26.09.10 அன்று ஒளிபரப்பானது. நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தவறவிட்ட நண்பர்கள் இதோ இங்கே பாருங்கள்: உங்களது மேலான விமர்சனத்தை பின்னூட்டுங்கள்!

இந்த குறும்படத்தின் கதை எ.எ.ஹெச்.கே.கோரி அவர்களின் “சொர்க்கம் பக்கத்தில்” சிறுகதை தழுவியதாகும். ஒளிபரப்பில் முன்னும்,பின்னும் வரும் டைட்டில் கார்டை எடிட் செய்துவிட்டார்கள்.
திரைக்கதை,வசனம்,இயக்கம் மட்டுமே யாம்!

படத்தின் வீடியோ;


நிகழ்ச்சி வீடியோ;
">part1

">part2

">part3
">
part4


">part5


அடுத்த சுற்று எனக்கு போலீஸ் ஸ்டோரி பிரிவு அதைகாண இரண்டுமாதம் பொறுத்தறுள்க!நன்றி!

திங்கள், 6 செப்டம்பர், 2010

”நாளைய இயக்குனரில்” நானும், என் நண்பன் ராமுவும்

கலைஞர் தொலைகாட்சியின் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியில் நானும் என் நண்பன் ராம் பங்கேற்றுள்ளேம். ராம் பங்கேற்ற நிகழ்வு 22.08.10ல் ஒளிபரப்பானது. அந்நிகழ்வின் வீடியோ கீழே:

பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை பின்னூட்டுங்கள். நன்றி!

நான் கலந்து கொண்ட நிகழ்வு வருகிற செப்26 ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் கா.....ணத்தவறா...தீர்கள்!

வியாழன், 15 ஜூலை, 2010

துரோகசாமி!

வரலாறு கூறும்!

நீ குடித்து முடித்த
டீ கிளாசை
இரு கையாலும்
ஏந்திக் கொண்ட தோழன்

உன் நாற்காலிக்காக
தன் நரம்புகளை
பின்னக் கொடுத்த தோழன்...

பட்டினி கிடந்தாலும்
உன் பசியாற்றி,
பயணப்படியோடு
வழியனுப்பிய தோழன்

உலகைக் குலுக்கும்
செங்கொடி உயர்த்தி,
உண்டியல் குலுக்கி உனை
வேட்பாளராக்கிய தோழன்....

கோடிகளை சுருட்டும்
கோமான்களை எதிர்க்க
உன்னை கோட்டைக்கு
அனுப்பிய தோழன்

எல்லாம் மறந்த
என் முன்னாள் தோழா!

முதலாளித்துவத்திற்கு
பரிவட்டம் கட்டி
பல்லக்கு தூக்க
முதுகு காட்டிவிட்டாய்!

இட்ட பெயர் உனக்கு
எதுவாகவும் இருக்கலாம்!

தொழிலாள் வர்க்கத்திற்கு
துரோகம் இழைத்த உன்னை
வரலாறு பதிவு செய்யும்
“துரோகசாமி”
என்றே!
-க.பாலபாரதி (நன்றி-தீக்கதிர்)

ஞாயிறு, 23 மே, 2010

லீவு

திகாலை நேரத்து இளஞ்சூரியன். தளிர்விடும் எழுமிச்சைசெடியின் இலைவழி சொட்டும் நீரில் மினுமினுத்தது.
செல்வம் அதற்குள்ளாகவே குளித்து ரெடியாகிவிட்டான். தேங்காய் எண்ணைபாட்டிலை குப்புறகவிழ்த்து தட்டி உள்ளங்கை பிசுபிசுப்பை தலையில் தேய்த்துக்கொண்டான்.பழுப்பேறிய கண்ணாடியில் அவன் முகம் பிரகாசமாய் மின்னியது.அவன் மனதுக்குள் ஒரே சிந்தனை.
ஒரு மாதமகவே பள்ளிக்கூடலீவு விட்டு பசங்க எல்லாம் மைதானத்துல விளையாட ஆரம்பிச்சுட்டனுக, தானும் அவங்ககூட வெளையாடனும்னு செல்வத்துக்கு கொள்ளைஆசை ஆனா ஒருமாசமா ஒருநாள்கூட லீவுவிடாம வேலை.எப்ப லீவு விடுவாங்களே, ஓடிப்போய் ஆசையா செம்மண்ல பொரண்டு விளையாடனும், லீவு முடுஞ்சா பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு ஓடிருவங்க. தலைவாரிய சீப்பை ஜன்னலிடுக்கில் சொருகிவிட்டு,சோத்துக்கூடையோடு வெளியேவந்தான்.

பொடக்காலியில் குளிக்கும் சத்தம் சோப்பு நுரையோடு வெளியேருகிறது.
வெளிவந்த செல்வம் பாசி பிடித்த சிமெண்ட்தொட்டியின் அடியில் ஏதோ துலாவுகிறான், அவன் தேடியது அகப்படக்காணேம் குழப்பமுற்றவனாய் “யம்மா.. இங்க தொட்டிக்கடிய வெச்சுருந்த என்னோட பந்த காணேம் அத பாத்தியா?”
”வேலைக்கு போறவனுக்கு எதுக்குடா பந்து” பொடக்காலிக்குள் இருந்து குரல்.
”இல்லமா சும்மாதா..”
“அது ஜன்னல்மேல இருக்கற போசிக்குள்ள இருக்கும் பாரு”
ஆவல் மேலிட ஓடிச்சென்று பந்தை எடுத்து கூடைக்குள் போட்டுக்கொள்கிறான்.
“மா போய்ட்டு வறேன்”

கூடையின் காதுகளை வலதுகையில் பிடித்து ஆட்டியபடியே சாலையோரமாய் செல்கிறான்.
மைதானத்தை நெருங்குவதற்குள்ளாகவே வெளையாட்டுச்சத்தம் “ஓ”வென எதிரொலிக்கிறது.
அந்த மைதானத்தின் சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாதவாறு சாப்பாட்டுக்கூடையோடு அங்கு நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான். கும்பலாய் அங்கங்கு கிரிக்கெட் விளையாட்டு நடக்கிறது. மட்டையால் பலத்த அடிவாங்கிய பந்து ஒன்று கதறியவாறு அவன் காலடிவந்து விழுகிறது. பந்தை கையிலெடுத்துப்பார்த்து தூக்கி எறிகிறான்.கூட்டத்திலிருந்து ஒருவன் “டேய் செல்வா வெளையாடவரியா ஒரு ஆள் பத்தல” என்கிறான்
இவன்பதிலை எதிர்நோக்கி பார்ப்பவன் “என்னடா வர்ரயா?” என்கிறான்
செல்வம் தலையை மட்டும் இடம்,வலமாக ஆட்டியவாறு தலைகவிழ்ந்து அங்கிருந்து நகர்கிறான். சற்று தூரம் செல்பவன்
கூடையிலிருந்த பந்தை எடுத்து தரையில் தட்டியவாறு செல்கிறான்.

கம்பெனிக்குள் நுழைந்ததும் சாப்பாட்டுக்கூடையில் பந்தை வைத்தான். “இங்கு குழந்தைத்தொழிலாளர்கள் பணியில் இல்லை” என்ற வாசகம் சுண்ணாம்பு பூச்சுக்குள் மறைந்திருந்தது. எல்லோருக்கும் முன்னதாகவே வந்துவிடுவான், கம்பெனியை கூட்டி சுத்தம் செய்தான், அதற்கு சம்பளத்தில் 50ரூபாய் சேரும்.
கூட்டி வழித்த குப்பைகளை கொட்டிவிட்டு நிமிர்வதற்குள் வேலையாட்கள்வரத்தொடங்கிவிட்டார்கள். வேலை ஆரம்பித்துவிட்டது.
ஓயாத இயந்திரஇரைச்சல். பிராணவாயுவோடு பஞ்சுதூசும் பாதியளவு கலந்த்திருக்கிறது. அது ஒரு உள்நாட்டிற்கு தேவையான ஜட்டி,பனியன்களை உற்பத்தி செய்யும் கம்பெனி. வருடம் முழுவதும் வேலை.நொடியும்பரபரப்பு.நோம்பிக்கு மட்டுமே லீவு கிடைக்கும்.செல்வத்தைபோல நான்கு பேர் அங்கு வேலைசெய்கிறார்கள் அவர்களில் இவன்மட்டுமே இளையவன். மதியத்தை நெருங்குவதற்குள் டீ வாங்கிவற இரண்டுமுறை அனுப்பப்பட்டான்.

சாப்பாட்டு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. செல்வத்துக்கு வேலையில் நாட்டமில்லை சிந்தனை முழுதும் மைதானத்தில் புரண்டுகொண்டிருந்தது. தைத்துபோடும் பனியனை விரித்து அடுக்குவதும்,அதை சைஸ்வாரியாக தனித்தனியாய் கட்டிவைப்பதும் அவன் வேலை. உடனுக்குடன் செய்யவேண்டிய வேலை கொஞ்சம் அசந்தாலும் தைத்துபோடும் பனியன் ”ஸ்டாக்” ஆகி மலைபோல் குவிந்துவிடும், அப்புறம் ”கான்ரேட்”காரனின் வசவை வாங்கிகட்டிக்கொண்டு சாப்பாட்டு நேரத்தையும் இழக்கவேண்டிவரும்.


செல்வத்தின் முன்னால் பனியன்கள் தேங்க ஆரம்பித்தன. ஒரு சுரத்தையில்லாமல் இருந்தான். அவனருகில் அடுக்கும் ஆனந்து செல்வத்தை பார்த்தவாறு “டேய் என்னடா இத்தனை பீச ஸ்டாக் போட்ட?” என்றான்
செல்வம் தான் ’நடந்துவந்தகதையை’ அவனிடம் கூற அவன் பெரியமனுசனைப்போல “ஆமான்டா நானும் எங்க அத்தை வீட்டுக்குபோய் ஆத்துல குளிக்கனும்னு போன நோம்பில இருந்துபாக்கறேன் போகவேமுடிலடா ஒருநாள் லீவு கெடைச்சா போதும் நானும்தான் பாத்துட்டே இருக்கேன்” என்று சொல்லிமுடிக்க செல்வம் தன் சோப்பிலிருந்து ஆரஞ்சுமுட்டாயை அவனுக்கு கொடுக்கிரான்,சிரித்தாற்போல் வாங்கி வாயிலிட்டுக்கொள்பவன் செல்வத்தின் ஸ்டாக்குகளை கடகடவென அடுக்கிதருகிறான்.

வேலை அப்படியே தொடர்ந்துகொண்டிருக்க,அப்போதுவந்த ஒரு டெலிபோனால் திடீரென கம்பெனி பரபரப்புக்குள்ளாகிறது.வேலை நிறுத்தப்படுகிறது, வேலை செய்பவர்கள் ஆளாளுக்கு ஏதோ பேசிக்கொள்கிறார்கள். பேச்சின் ஊடாக எல்லோரது பார்வையும் செல்வத்தின் மேல் நிலைகொள்கிறது. அமர்ந்திருக்கும் செல்வம் தலையை இருபுறமும் திருப்பி என்னவென்று அறிய,ஆர்வம் மேலிட பார்க்கிறான்.பக்கத்திலிருக்கும் ஆனந்திடம் கேட்க “செக்கிங்கு ஆபீஸர் வராங்க்ளாமாடா..வந்தாங்கன்னா வேலைசெய்யற சின்னப்பசங்கள புடுச்சுட்டு போய்ருவாங்கடா!” என்கிறான்
செல்வத்துக்கு படபடப்பு ஏற்பட ஆனந்தை பார்க்கிறான், “பயப்படாதடா..எனக்கு இப்ப பதினைஞ்சு வயசுக்கு மேல ஆச்சு நா சின்னப்பயன்ல வேலைசெய்யறப்ப இதேமாதிரிதான் ஒருக்கா செக்கிங்கு வந்தாங்க அபோ ஓனர் எனக்கு லிவு குடுத்து பின் கேட்டு வழியாதாட்டி வீட்டுட்டாரு இப்ப பாரு உன்னைய போக சொல்லீருவாரு” என்கிறான். அவன் கடைசியாக சொன்ன வார்த்தைதான் செல்வத்துக்கு சந்தோசத்தை கொடுத்தது.

செல்வத்துக்கு கற்பனை பலவண்ணங்களில் பூக்க ஆரம்பித்தது, அவன் மனம் மைதானத்தின் புழுதிக்குள் புரள ஆரம்பித்தது.கால்கள் நிலைகொள்ள மறுத்தன, மனப்பரபரப்பு அதிகமாகியது. கான்ராக்ட்காரன் கூப்பிட்டதுகூட அவன் காதில் விழவில்லை. ஆனந்து அவனை உலுக்கியதும்தான் சுய நினைவுக்கு வந்தான். “டேய் செல்வம் இங்க எந்துருச்சு வாடா!” என்ற கான்ராக்ட்காரனின் குரல் வழக்கத்துக்குமாறாக சந்தோசத்தை கொடுத்தது.

எழுந்துசெல்பவன் திரும்பி ஆனந்தை பார்த்து தலையாட்டி சிரித்தபடி போகிறான்.
“இங்க வா” என்று செல்வத்தின் கரம்பற்றிஇழுத்துச்செல்லும் கான்ராக்ட்காரன் செல்வத்தை கழிவறைக்கு அருகிலுள்ள பழைய துருப்பிடித்த இரும்பு ட்ரம்முக்குள் இறக்கிவிடுகிறான். “இங்க பார்றா நா வந்து ட்ரம்மை தொறக்கறவரைக்கு சத்தம் போடாம உள்ளயே இருக்கனும் ம்.. ஆபீஸர் போனதும் வந்துருவேன் சரியா! கம்முனு உக்காந்திரு மூச்!” ட்ரம்மை மூடிவிட்டு செல்கிறான்.
சுற்றிலும் இருள்!

சனி, 6 பிப்ரவரி, 2010

“கண்ணாமூச்சி”-எனது புதிய குறும்படம்


கதைகளை படிப்பதிலிருந்தோ, நேரும் எதோனும் சம்பவத்திலிருந்தோ, பார்க்கும் எதாவது படத்திலிருந்தோ சதா கதைகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது.
உற்பத்தியாகும் கதைகள் பல ஓரிருநாட்களில் நீர்த்துப்போய்விடுகின்றன. அப்படியும் மனதிலேயே நிற்கும்ஒன்றை முழுவடிவம் கொடுத்து படமாக்குவதென்பது எனது வேலைச்சூல்நிலைக்குட்பட்டுத்தான், காத்திருந்துஅதிலிருந்து தேறும் ஒன்றை குறும்படமாக்குகிறேன்.

தற்போது கண்ணாமூச்சிஎன்று ஒரு குறும்படம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே படப்பிடிப்பு, நண்பர்களே நடிகர்கள்,பழகுமிடங்களே லொகேசன்,கையில் கேண்டி கேமிரா,வேறென்ன செய்ய அதுதானே சாத்தியமாகிறது.

நான் எழுதும் கதை!?களுக்கு திரைவடிவம் கொடுத்துப்பதன்மூலம் ‘திரைமொழியை’ கற்றுக்கொள்ளும் முயற்சி!

ஆனால் இது மட்டுமே போதாதுதான்! இன்னும் நிறைய செய்யவேண்டும் எழுத்தாளர்களது கதைகளைக்கொண்டு குறும்படங்களைச் செய்யவேண்டும். அவசியமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டும். திரைமொழியை கைக்கொள்ளவேண்டும், பலரையும் ஆச்சர்யப்படுத்தவேண்டும், எனக்கும் நிறைய ஆசையிருக்கிறதுதான்!

இந்த குறும்படத்தைப்பற்றி தோழர் மாதவராஜ் அவர்கள் தனது தீராதபக்கங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தி கருத்துக்களை பகிர்ந்துகண்டதோடு பலநூற்றுக்கணக்கானேர் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திதந்தார். அதுபோலவே நண்பர் முரளிகுமார் பத்மநாபன் அவர்களும் தனது அன்பேசிவம் தளத்தில் கண்ணாமூச்சி குறும்படத்தை அறிமுகப்படுத்தியிருந்தார், அதுபோல புதியதலைமுறை உதவி ஆசிரியர் கல்யாண்குமார் அவர்கள் தனது உதயம் தளத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார் அவர்களுக்கும் இந்த பதிவின் மூலமாக நன்றியை தெவித்துக்கொள்கிறேன்!


நண்பர்களே! இந்த படத்தை பருங்கள், உங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்,அதுவே என்னை செம்மைப்படுத்தும்.
காத்திருக்கிறேன்...........

Kannamoochi
by mathavaraj
">செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

திருப்பூர் புத்தககண்காட்சியில் குறும்படங்கள் திரையிடல்

திருப்பூரில் நாளைமுதல் பிப்7வரை மாபெரும் 7வது புத்தககண்காட்சி மிகசிறப்பாக நடைபெற்றுவருகிறது. புத்தக பிரியர்களும், குறும்பட ஆர்வலர்களும் பெருமளவு கலந்துகொண்டு வருகிறார்கள், இந்நிகழ்வில் தினமும் மாலை 4மணி முதல் 6மணி வரை உலகப்படங்களும்,குறும்படங்களும் திரையிடப்பட்டு வருகிறது.


குறும்பட அரங்கு புத்தககண்காட்சி நுழைவாயிலுக்கு அருகில் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் வருக! நிகழ்வை சிறப்பித்து தருக!

திரையிடப்பட்டுவரும் குறும்பட,ஆவணப்பட,உலகப்பட அட்டவணை கீழே காண்க
***********************************************************************************

வியாழன், 7 ஜனவரி, 2010

பாக்கியம் சங்கர் கவிதைகள்

இந்தவார ஆனந்தவிகடனில் எனது அன்புநண்பர் பாக்கியம் சங்கர் அவர்களின் கவிதைகள் வெளிவந்துள்ளன.

ஆனந்தவிகடன் கையில் இல்லையா?! இதோ அந்த கவிதைகளை இங்க படீங்க பாஸ்!மன்னிக்காதீர்கள் நண்பர்களே!
*********************************
முடிக்கப் பெறாத கட்டடத்தின்
மேல் மாடியில்
அகாலத்தில் அழுதுகொண்டிருக்கிறாள்
காக்காணி நிலமென்றாலும்
தன் பூமி தன் வாழ்வென
கர்வம்கொண்டிருந்தவள்
எல்லாம் பொய்த்துப் போனபின்
சித்தாள் வேலை செய்துகொண்டிருக்கிறாள்
நிரம்பப் போதையில்
மேஸ்திரி ஜாடை காட்ட
இந்தச் சோறும் போய்விடுமோவென
போர்வைக்குள் நுழைந்துகொள்கிறாள்
எந்த நாதியுமற்ற அவள்!
**********************************************

லீல் செளத்ரியின் பாடல் கேட்டபடியே
இரவுகளை வாழ்ந்துகொண்டிருக்கிறான் தேசாந்திரி
கூடாரத்தின் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்
ஒளிந்து விளையாடும் பிள்ளைகள்
ஜில்லிடும் இப்பொழுதில்
சூடாகச் சாயா குடிக்கும்
இவ் வம்சத்தின் மூத்த கிழவன்
அலைந்து திரியும் இப் பறவைகளுக்குக்
கூடும் இல்லை வேர்களும் இல்லை
இதைப்பற்றிய விசனமும் இல்லை!
****************************************************

ன் இப்படி என்றேன்
ஏன் கூடாது என்றாள்
இந் நிலவொளியில் என் மடிகிடந்து
கதைப்பாயா என்று கேட்டேன்
அடக்க மாட்டாமல் சிரித்தவள்
நீ கவிஞனா எனக் கேட்டாள்
இந்தத் தொழிலுக்கு ஏன் வந்தாய் என்றேன்
பிடிச்சிருக்கு என்றாள்
மேலும் கேட்கத் தோணாமல்
அவள் மடி புதைந்தேன்
என்னை ஆற்றுப்படுத்தியவள்
சிரித்தபடியே இருந்தாள்
தேவதைகள் அவ்வப்போது
காட்சியளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
*************************************************************

வுனுக்குப் போகலாமென்றிருந்தது
பொரித்த புரோட்டாக்களைச்
சொல்லிவிட்டு காத்துக்கொண்டிருந்தேன்
களைந்த கேசமும் வெறித்த கண்களுமென
ஆடைகளற்றுத் தேமேவென
சாயா கேட்டுக்கொண்டிருந்தான்
பால்ய காலத்து நண்பன் கனகசுப்ரமணி
பயங் கலந்தபடி அவ்வப்போது
என்னைப் பார்த்துக்கொண்டே
முகம் முழுக்கச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்
சில ரூபாய் தாள்களை திணித்துவிட்டு
ஏதும் செய்ய இயலாதபடிக்கு நகர்ந்துவிட்டேன்
பெருங்குரலெடுத்து ஓலமிட்டான் நண்பன்
உலகத் துன்பத்தின் ஒட்டுமொத்தக் குரலாக
அது இருந்தது!
************************************************************

மூச்சுக்கு முந்நூறு தடவை
ஓடுகிறாள் சாடுகிறாள்
அவளின் வயதொத்த பெண்ணின்
கால்களைக் கழுவுகிறாள்
பெடிக்யூர் என மொழிபெயர்க்கிறாள்
அவளின் எஜமானி
பூ வரைந்த தட்டுக்களையும்
விதவிதமான குவளைகளையும்
பத்திரமாகத் துடைத்துவைக்கிறாள்
தனக்கேன ஒதுக்கப்பட்ட
அலுமினியத் தட்டில்
கறிச்சோறும் புளிக்கறியும் இருந்தாலும்
தேமேவென உண்கிறாள்
எஜமானர்கள் வெளிக் கிளம்ப
சுருண்டுகொள்ளும் பூனையாட்டம்
அயர்ந்து உறங்குகிறாள்
ஒரு பிணத்தைப்போல!
**************************************************

ப்படியாக
நாம் கடந்து செல்லும்
இம் மனிதர்களைப்பற்றி
கவிதை எழுதிக்கொண்டிருக்கும்
இந்தக் கையாலாகாதவனை
மன்னிக்காதீர்கள் நண்பர்களே
பார்வையாளன்
ஒருபோதும் பங்கேற்பாளனாக
முடியாதென்பதை
நீங்களும் அறிவீர்கள்தானே! . (நன்றி-ஆனந்தவிகடன்)
**********************************

வெள்ளி, 1 ஜனவரி, 2010

திருப்பூரில் "கலைஇரவு”கோலாகலம்- ஒரு பதிவு
ஓயாத இயந்திர இரைச்சல்களுக்கு மத்தியில் ஆயாசமாக அலைகிறது மனம். அவ்வப்போது இலக்கிய அமர்வுகளும், இலக்கிய நண்பர்களுடனான சந்திப்புகளுமே கலை சார்ந்த எம்மனதிற்கு நிறைவளிப்பதாய் அமைகிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிகழ்வு முடிந்தபின்பான நண்பர்களுடனான அரட்டை களைகட்டும், உற்சாகமும்,புதுஎண்ணமுமாய் மனமும்,அறிவும் வண்ணமயமாகும்! அப்போது நேரம் ஒன்றே பிரிவினைவாத சக்தி!

வெறுமையை போக்கி மனதை பசுமையாய் ஆக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை கண்டாலே உள்ளம் குதியாட்டம் போடுகிறது.

அந்த வகையில் த.மு.எ.க.ச.வின் கலைஇரவு பற்றிய அறிவிப்பு மிக நல்லதொரு நிகழ்வை காணபோகும் ஆர்வத்தை தூண்டியது.

திருப்பூரின் மிக முக்கியமான நாள், சம்பள நாள். நகரமே பரபரப்பாய் இருக்கும்போது சனிக்கிழமை மாலை நடக்கும் கலைஇரவை எத்தனைபேர் கண்டுகொள்ளப்போகிறார்கள் என்றெண்ணியிருந்தேன்.
என் நினைப்பை தவிடுபொடியாக்கும் வகையில் அன்றுமாலை ஆயிரக்கணக்காணோர் கூடியிருந்தது மிகப்பரவசமாய் இருந்தது!

அடுத்தது இத்தனைபேர் ஆரம்பத்தில் கூடியிருந்தது மகிழ்ச்சி என்றாலும் நிகழ்ச்சி முடிவுவரை இத்துனைபேரும் கலையாமல் இருந்தால்தானே... ஒருவேளை கலைந்துவிட்டால்...? பார்ப்போம் (நிகழ்ச்சியின் வரவேற்புக்குழுவில் நானும் இருக்கிறேனென்றாலும் அப்போதைக்கு எனக்கு எந்த வேலையும் இல்லை) நானும் மக்களோடு அமர்ந்து நிகழ்ச்சியை காணத்துவங்கினேன்.

முதல் நிகழ்வாக கவிநயா பரதநாட்டிய குழுவினரின் பரதம் அரங்கேரியது.

சிறுவர், சிறுமியரின் கலை ஆர்வம் மெச்சத்தகுந்ததே! குழுவாய் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிக்கல் இருக்கிறது போலும்,

இன்னும் ஒன்றிரண்டு அரங்கேற்றம் கண்டார்களேயானால் திறமை மிளிரும்!

அடுத்து வேலாஇளங்கோ அவர்களின் குழுவினரின் நாட்டுப்புறப்பாடல் மிக இனிமையாக இருந்தது், அதிலும் திண்டுக்கல் ராஜலட்சுமியின் “குரல்” நாலாப்புறமும் பட்டெதிரொலித்தது! சூழலுக்கு ஏற்றாற்போல் சொந்தவார்த்தைகளை போட்டு பாடி அசத்தியது பார்வையாளர்கள் மத்தியில் கரகோசம்.


அடுத்து “திருப்பூர் நாடகக்குழு” வின் “வரிசை” என்ற சமூக அவலம் சாடும் நகைச்சுவை நாடகம் நடந்தது, தோழர் தாண்டவக்கோன் அவர்கள் திறம்பட ஒருங்கிணைத்து நடத்தினார்.


அடுத்து அரங்கம் அதிர பறை அடித்து பரவசப்படுத்தினர் “திண்டுக்கல் சக்தி தப்பாட்டக்குழுவினர்.


பெண்கள் வீணை போன்ற மெல்லிய இசைக்கருவிகளை வாசித்துதான் அநேகம்பேர் பார்த்திருப்போம் ஆனால் அடிவயிரு அதிற,அதிற பறையடித்து ஆடியது நாடி,நரம்புகளில் காலாகாலமாய் அடிமைபடுத்தி வைத்திருக்கும் ஆணாதிக்க சமூகத்திற்கெதிராக கொப்பளித்துப்பொங்கிய கோபமாகவே தோன்றியது!

நிகழ்ச்சியின் இடையிடையே கவிஞர்கள் கோவைசதாசிவம்,இரா.சிந்தன்,தாண்டவக்கோன்,இளையபாரதி,ஜெயராம்,தேவயானை ஆகியோரின் கவிச்சரம் சிந்தனைகளை விதைத்தது. அதிலும் தாண்டவக்கோனின் “அறிவுத்திறப்பு” கவிதை ஒரு சமூக அவலங்களை சாமனியனுடனான கேள்வி நடையில் சாடியது கவனம் ஈர்த்தது!
இரா.சிந்தனின் “புத்தாண்டே வருக” வரும் புத்தாண்டு எவ்வாறு வேண்டும் என்ற சிந்தனின் சிந்தனை மிகவும் சிறப்பு கவிதையை சொல்லும் பாங்கு பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாய் இருந்தது!
அடுத்து கவிஞரும்,பேச்சாளருமான நந்தலாலா அவர்கள் பேசும்போது பாரதியாரைப்பற்றியும்,பாரதிதாசனைப்பற்றியும் பல்வேறு நுட்பமான தகவல்களை தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு எடுத்துரைத்தமை அந்தபொழுதை பயனுள்ளதாக்கியது

அடுத்து உரைவீச்சு. த.மு.எ.க.ச பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் தமக்கே உரித்தான மிக இயல்பான நடையில் நறுக்கென்று கருத்துக்களை பதித்தார். “எதையும் இரண்டாக பார்க்கவேண்டும், இருவேறு கருத்தோட்டத்தை புரிந்து கொள்வது பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார், மேலும் தமிழில் பல்கலைக்கழகங்களில் “மானுடவியல்”என்ற ஒரு துறை இல்லாமலிருக்கிறது அதை தோற்றுவிக்கவேண்டும் என்றும் கூறினார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை வரவேற்கிறோம் என்றும், இந்த சூழ்நிலையில் த.மு.எ.க.ச கேட்டுக்கொள்வதாக மைசூரில் மத்திய அரசின் தொல்லியல் சார்ந்த நிறுவனத்தில் கேட்பாரற்று கிடக்கும் பிராமி தமிழ் எழுத்து கல்வெட்டை ஆராய வேண்டும், ஆட்சிமொழியாக தமிழ் மொழியை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் சமச்சீர் கல்விப்பாடத்திட்டத்தில் பெரியாரி்ன் கருத்துக்களுக்கும், மூடநம்பிக்கை எதிர்ப்பு பாடத்தி்ற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ராமகோபாலனை முற்போக்காளர்கள் கண்டிக்கவேண்டும் என்றும் மிகச்சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
அடுத்த நிகழ்வாக மேடையில் மூன்று குறும்படங்கள் வெளியிடப்பட்டன
என்னுடைய குறும்படம் “கண்ணாமூச்சி” தமிழ்செல்வன் தோழர் அவர்கள் வெளியிட்டார். (படத்தில் பின்னால் கண்ணாடி அணிந்து நிற்பவர் என் நண்பரும் படத்தின் எடிட்டருமான தே.ராம்)

கார்த்தியின் ‘(க)தண்ணீர்தேசம்’,இரணியனின் ‘சரஸ்வதி ஒரு தரம்’ வெளி்யிடப்பட்டன.


மணி12 நள்ளிரவு. நிகழ்ச்சி அறிவிப்பாளர் அடுத்த நிகழ்வு தஞ்சை s.p.பாஸ்கரின் பலகுரல் என்று அறிவித்தார், “பலகுரலா...! சரி எழுந்து போய் ஒரு டீ சாப்பிட்டு வரலாமென எழுந்து சென்றேன். டீயை ஆர்வமாய் குடிக்கமுற்பட ஒலிபெருக்கியில் மிருதங்க இசை கணீர் என்று கேட்டது. மேடையை நோக்க பாஸ்கர் மட்டுமே நின்றிருந்தார் கையில் எந்த இசைக்கருவியும் இல்லை, அவர் தன் வாயிலேயே பல்வேறு இசைக்கருவிகளை மிக அற்புதமாக இசைத்துக்காட்டி ஆச்சர்யப்படுத்தினார் . மிருதங்கத்திற்கும்,கஞ்சிராவிற்கும்,மோர்சிங்கிற்கும் இடையே நடந்த மும்முனை போட்டிக்கசேரி, அதிஅற்புதமான அனுபவமாய் இருந்தது. பலகுரல் என்று சினிமா நடிகர்களின் குரலையே ஓயாது ஒப்பிக்கும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல நான் என்று காட்டினார். அதோடு அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களை சாதிஅடிப்படையில் அவமானப்படுத்தும் சூழலே உள்ளது, அவர்களுக்கு உரியமரியாதை இல்லையென்று வருத்தப்பட்டது கவலையளிக்கத்தக்கதாய் இருந்தது. ஆம் உள்ளபடியே இது வெட்ககேடான விசயமாகும்!

அடுத்து இரண்டு மணி நேரத்திற்க்கு கூட்டத்தை கட்டிப்போட்ட நிகழ்ச்சிகள்..........................

-அடுத்த பதிவில் முடிக்கிறேன்!