“கண்ணாமூச்சி”-எனது புதிய குறும்படம்


கதைகளை படிப்பதிலிருந்தோ, நேரும் எதோனும் சம்பவத்திலிருந்தோ, பார்க்கும் எதாவது படத்திலிருந்தோ சதா கதைகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது.
உற்பத்தியாகும் கதைகள் பல ஓரிருநாட்களில் நீர்த்துப்போய்விடுகின்றன. அப்படியும் மனதிலேயே நிற்கும்ஒன்றை முழுவடிவம் கொடுத்து படமாக்குவதென்பது எனது வேலைச்சூல்நிலைக்குட்பட்டுத்தான், காத்திருந்துஅதிலிருந்து தேறும் ஒன்றை குறும்படமாக்குகிறேன்.

தற்போது கண்ணாமூச்சிஎன்று ஒரு குறும்படம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே படப்பிடிப்பு, நண்பர்களே நடிகர்கள்,பழகுமிடங்களே லொகேசன்,கையில் கேண்டி கேமிரா,வேறென்ன செய்ய அதுதானே சாத்தியமாகிறது.

நான் எழுதும் கதை!?களுக்கு திரைவடிவம் கொடுத்துப்பதன்மூலம் ‘திரைமொழியை’ கற்றுக்கொள்ளும் முயற்சி!

ஆனால் இது மட்டுமே போதாதுதான்! இன்னும் நிறைய செய்யவேண்டும் எழுத்தாளர்களது கதைகளைக்கொண்டு குறும்படங்களைச் செய்யவேண்டும். அவசியமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டும். திரைமொழியை கைக்கொள்ளவேண்டும், பலரையும் ஆச்சர்யப்படுத்தவேண்டும், எனக்கும் நிறைய ஆசையிருக்கிறதுதான்!

இந்த குறும்படத்தைப்பற்றி தோழர் மாதவராஜ் அவர்கள் தனது தீராதபக்கங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தி கருத்துக்களை பகிர்ந்துகண்டதோடு பலநூற்றுக்கணக்கானேர் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திதந்தார். அதுபோலவே நண்பர் முரளிகுமார் பத்மநாபன் அவர்களும் தனது அன்பேசிவம் தளத்தில் கண்ணாமூச்சி குறும்படத்தை அறிமுகப்படுத்தியிருந்தார், அதுபோல புதியதலைமுறை உதவி ஆசிரியர் கல்யாண்குமார் அவர்கள் தனது உதயம் தளத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார் அவர்களுக்கும் இந்த பதிவின் மூலமாக நன்றியை தெவித்துக்கொள்கிறேன்!


நண்பர்களே! இந்த படத்தை பருங்கள், உங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்,அதுவே என்னை செம்மைப்படுத்தும்.
காத்திருக்கிறேன்...........





Kannamoochi
by mathavaraj
">



கருத்துகள்

  1. வாழ்த்துக்கள் இரவிக்குமார். குறும்படம் நன்று.

    முதலில் செஸ் காய்களை விட தாத்தா சிறிதாக
    இருப்பது, பிறகு செஸ் காய்களை விட தாத்தா உயரமாய் இருப்பது - ரசிப்பதாக உள்ளது.

    சில காட்சிகள் குறைக்கப்பட்டு, பத்து நிமிடத்துக்கு உட்பட்டதாக இருந்தால் மிக நன்றாக இருக்கும்.

    புகைபிடிக்கும் காட்சிகள் தேவையா ?

    அன்புடன்,
    இரத்தினவேல் சுப்பிரமணியன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி இரத்தினவேல் சுப்பிரமணியன் அவர்களே.
    படத்தை இன்னும் குறுக்கியிருக்கலாம்தான் இப்போது படுகிறது.
    புகை பிடிக்கும் காட்சி இயல்பாக இருக்கும் என்று எண்ணி வைத்தேன். தேவையில்லாததுதான்.
    கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ரசிக்கத்தக்க ஒரு மெல்லிய நகைச்சுவையும் / சோகமும் கலந்தோடியது படத்தில்.
    அனைவரின் கருத்துப் போல இன்னும் சுருக்கியிருக்கலாம்.
    பங்கேற்றவர்களின் பெயர்கள் வரும் போது, பின்புலத்தில் வரும் சதுரங்கப் பலகையின் வடிவம் மிக அருமை!

    தாத்தாவும், பேரனும் நன்கு நடித்திருந்தனர்.

    படம் முழுவதும் தெரியும் உங்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் ரவி!

    பதிலளிநீக்கு
  4. நான் அவ்வளவாக சினிமா பார்ப்பதில்லை. நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சில குறும்படங்களைப் பார்ப்பேன். முரளி பத்மநாபனின் மூலம் உங்களுடைய அழகான குறும்படத்தைப் பார்த்தேன்.

    ஹாண்டி கேமிராவில் இந்த அளவிற்கு எடுத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களுடைய முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. எதையும் தெளிவாகக் கற்றுக் கொண்டு நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்கிற உத்வேகம் தாத்தாவிடம் மட்டுமில்லை அதை இயக்கிய உங்களிடமும் பார்க்க முடிகிறது. மிகக் குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு சொல்லவந்த விஷயத்தை இவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிற உங்களைப் பாராட்டியே தீர வேண்டும். ஒரு தரமான இயக்குனராகப் பிரகாசிக்க வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. படம் ரொம்ப நல்லா இருக்குது.‘திரைமொழியை’ நன்றாகவே கைகொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ரவி !

    முதலில் செஸ் காய்களை உயரமாகவும்,தாத்தா செஸ் கத்துக்கிட்ட பிறகு செஸ் காய்களை விட அவர் உயரமாகவும் காட்டியது அழகு

    தாத்தா பேரனிடம் பேசும்போது 'Sunday கூட்டிட்டு வான்னு சொல்ல,பேரன் 'four days'தான் இருக்குன்னு சொல்ற இடத்துல, இன்றைய தலைமுறை பேச்சுவழக்கில் ஆங்கிலம் அதிகம் பேசுவதையும், தாத்தாவும் அதற்கேற்ப ஆங்கிலம் பேசுவதாகவும் புரிஞ்சுக்கிட்டேன்
    ..ஞாயிற்றுக்கிழமை, 4 நாள்ன்னு இருந்திருந்தா இன்னும் இயல்பா இருந்திருக்குமோ ?

    பதிலளிநீக்கு
  7. எந்த ஒரு படத்தையும் பார்க்காமல் .. பதிவுகளை மட்டும் படிக்கும் ஒரு தம்பியால் என்ன செய்ய முடியும்? இப்படி சும்மான் ஒரு கருத்துரை போடுவதை தவிற ?

    பதிலளிநீக்கு
  8. அருமையான முயற்சி நண்பா. சாம்பியன் அந்த தாத்தாவும் நீங்களும்

    பதிலளிநீக்கு
  9. உயிர் துடிப்பான narration.படபிடிப்பும் அருமை.தாத்தா மனதில் நிற்கிறார்.தரமான இசை.

    பதிலளிநீக்கு
  10. நண்பர் சிவகுமார் அவர்களுக்கு என்னுடைய பராட்டுகள். உங்களுடைய குறும்படம் மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களுடைய கதைக்கான கரு மிகவும் சிறப்பு. இன்னும் ஒரு சில நிமிடங்கள் குறைவாக இருந்திருந்தால் மேலும் மனதில் ஊன்றி இருக்குமோ! என்பது என் சிறு கருத்து
    மேலும் நிறைய படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்.
    இவண் ஆக்னஸ் ஜாகிர்

    பதிலளிநீக்கு
  11. நல்ல படைப்பு.. ரத்னா அவர்கள் கூறியது போல், ஆரம்பத்தில் செஸ்களை பெரிதாகவும், பின்னர் சிறிதாகவும் காட்டியிருப்பது அருமை. அதே போல், நேர ஓட்டத்தை காண்பிக்க, கடிகாரத்தின் ”முனை”க் காட்சி கவர்ந்தது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்