முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

அம்மாவின் வாழ்க்கைப்பதிவு

        1967 ம் ஆண்டு நம்பியூ ரை அடுத்த பட்டிமணியகாரம்பாளையத்தில் சரஸ்வதி - ரங்கசாமி தம்பதிக்கு , அவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு மூத்த மகளாக பிறந்தார் கல்யாணி .   கல்யாணி பிறந்து ஒன்றிரண்டு வருடங்களிலேயே அவரது அம்மா சரஸ்வதி உடல் நலம் குன்றி இறந்துவிட்டார் . அதனால் , அவர் தன் தாய்முகத்தை நினைவுகொள்ளாத மகளாகவே வளர்ந்தார் . அப்பா ரங்கசாமி நெசவுத் தொழிலாளி .   கல்யாணி பட்டிமணியகாரம்பாளையம்   தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படிப்பை முடித்தவர் .   பின் அப்பாவோடு நெசவுக்கு துணையாக வீட்டில் இருந்துவிட்டார் . அவரது அம்மாவின் அண்ணன் பாட்டப்பன் அவர்கள் அருகிலிருக்க , மாமன் மகள் சம்பூர்ணா ஆகியோர் துணையோடு , தனது இளமைக்காலத்தைக் கடந்தார் . சிறுவயதிலேயே துண்டு பேப்பர் கிடைத்தாலும் , அதை முழுக்க வாசித்துவிடும் வாசிப்பு பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது .   ஒருமுறை மாமா வீட்டிற்கு கோபி சென்றிருந்த சமயம் , வேடிக்கையாக திரையரங்கத்திலிருந்து , சினிமா கதை வசன சப்தம் கேட்க , அதன் அருகிலிருந்த மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டாராம் .   இது தெரியாமல் கல்யாணியை காணோம் என்று

சமீபத்திய இடுகைகள்